மிக நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படும் சம்பூர் சூடைக்குடா வீதியினூடாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கல்வி ,சுகாதாரம் , வாழ்வாதார மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மிகுந்த சிரமத்துடன் பயணித்து வருகின்றனர் . எனினும் குறித்த வீதி அபிவித்திக்கென நிதி ஒதுக்கப்பட்டும் பாவனைக்குதவாத நிலையிலையே பல ஆண்டுகளாக காணப்படுகின்றது .

குறித்த வீதி அபிவிருத்தி திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுயடன் வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினூடாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் 132.7 மில்லியன் ரூபா செலவில் அமைக்கபடுவதற்கான பெயர்ப்பலகைகள் மாத்திரம் ஆங்காங்கே நடப்பட்டிருக்கிறது .
எனினும் ஒப்பந்தக்காலமாக திகதியிடப்பட்ட 25.9.2019 தொடக்கம்
24 .09.2021 திகதிவரையான 02 ஆண்டுகால நிர்மாணிப்புக்காலம் கடந்த 24 ம் திகதியுடன் காலாவதியாகிய நிலையிலும் இதுவரை வீதி செப்பணிடப்படுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

ஒப்பந்தக்காலம் நிறைவுற்ற நிலையில் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செயற்றிட்டத்தின் நிலை என்ன என பிரதேச மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் மிக பிரபல்யமான சுற்றுலாத்தலமான சம்பூர் வெளிச்சவீட்டுக்கு ( சூடைக்குடா ) செல்லும் குறித்த பாதையானது மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதால் வருகைதருகின்ற சுற்றுலா பயணிகளும் தமது போக்குவரத்தின்போது தங்களது வாகனங்களுக்கான பாதுகாப்பற்ற தன்மையினை உணருவதாக விசனம் தெரிவிக்கின்றனர் .

யுத்தத்தின் சுவடுகளை தாங்கி வாழும் இம்மக்களின் போக்குவரத்து பாதையும் சிதைவடைந்த நிலையிலையே காணப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும் . குறித்த அபிவிருத்தி நிதி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட போதும் அதிகாரிகளுன் அக்கறையற்ற தன்மையினால் ஒப்பந்தக்காலம் முடிவடைந்தும் இதுவரை எதுவிதமான திருத்த நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படவில்லை .

பிரதேச மக்களின் போக்குவரத்திற்காக அல்லாவிட்டாலும் சுற்றுலாத்துறை சார் வருவாய்க்காகவேனும் குறித்த சம்பூர் சூடைக்குடா வீதியினை செப்பணனிடும் நடவடிக்கையினை துரிதப்படுத்த சுற்றுலாத்துறையினர் அழுத்தம் வழங்குவார்களா ?

சம்பந்தப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அதிகாரிகளே இது உங்களின் கவனித்திற்கு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed