வீடுகள் இல்லாத  அனைவருக்கும்  வீடுகள் பெற்றுக்கொடுப்பதட்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றது இதனடிப்படையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான  வீடுகள் அமைத்துக் கொடுக்க உரிய அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவின் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளிற்கான       ஆரம்ப கட்ட நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதிக்கான காசோலைகள்பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வில் தெரிவித்தார்.

இன்று 30.09.2021  மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவின் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளிற்கான       ஆரம்ப கட்ட நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதிக்கான காசோலைகள் தெரிவுசெய்யப்பட்ட 24 பயனாளிகளுக்கான  பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு  குறித்த பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு  போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .

அமைச்சரின்  ஊடக இணைப்பாளர்

இரா.சுரேஸ்குமார் 071455101

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *