30.09.2021

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களின் விளையாட்டு துறையை ஊக்குவிப்பதற்காக மாவட்டத்தின் அனைத்து விளையாட்டு மைதானங்களும் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதனடிப்படையில் மட்டக்களப்பு படையாண்டவெளி இளந்தளிர் இளைஞர் கழக விளையாட்டு மைதானத்திற்கான முதற்கட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று 30.09.2021 வியாழக்கிழமை இடம்பெற்றது.

பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்திவீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த விளையாட்டு மைதானத்திற்கான அபிவிருத்தி திட்டத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார்இந்த நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சின்னத்துரை புஸ்பலிங்கம்இராஜாங்க அமைச்சரின் பட்டிப்பளை பிரதேசத்திற்கான பிரதான அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமாகிய வை.சந்திரமோகன்இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட கிராம மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

அமைச்சரின்  ஊடக இணைப்பாளர்

இரா.சுரேஸ்குமார் 0714551010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *