ஊடகவியலாளர்கள், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் பொறுப்பற்ற வகையில் செயற்பட்ட அதிகாரிகள் தொடர்பில் காவல்துறைமா அதிபரின் உத்தரவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வழமையான செயற்பாடுகள் அல்லவெனவும், அத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக ஊடகங்களிடம் உதவிகோரும் சந்தர்ப்பங்களில் குறித்த ஊடக நிறுவனங்கள் உதவி புரிந்துவருகின்றன.

எனினும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்கள் எவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தினால் அசௌகரியத்துக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்குத் தமது வருத்தத்தைத் தெரிவிப்பதாகக் காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பொறுப்பற்ற முறையில் கவனயீனமாகச் செயற்பட்ட அத்திணைக்களத்தின் அதிகாரிகள் தொடர்பில் காவல்துறைமா அதிபரின் உத்தரவில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்களின் கருத்துரிமைக்கு காவல்துறை எல்லா சந்தர்ப்பங்களிலும் மதிப்பளிக்கும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *