குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் மரணமானதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ள குறித்த பெண்ணுக்கு, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹப்புத்தளை – தொட்டலாகலை பகுதியில் கடந்த 29ஆம் திகதி தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய 14 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியிருந்தனர்.

அவர்களில் ஹப்புத்தளை – பிட்டரத்மலை பகுதியைச் சேர்ந்த 49 வயதான பெண்ணொருவரே இவ்வாறு மரணித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மரண பரிசோதனைகளின் பின்னரே உயிரிழந்தமைக்கான காரணத்தை வெளிப்படுத்த முடியும் எனக் வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *