தொல்லியல் துறையின் முன்னாள் பணிப்பாளரும், தொல்பொருள் ஆய்வாளருமான கலாநிதி ஷிரான் உபேந்திர தெரணியகல இன்று தமது 79 ஆவது வயதில் காலமானார்.

குருவிட்ட – எக்னெலிகொட பகுதியில் தமது வீட்டில் வைத்து அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது சரீரம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

அவரது சிறப்பு ஆய்வுப் படைப்பான The Pre -History of Sri Lanka Volumes 1, 2, 3 (1992) என்ற விசேட ஆய்வு நூல்கள், இலங்கையின் முற்கால வரலாறு குறித்து எழுதப்பட்ட மிகச் சிறந்த ஆய்வுப் படைப்பாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed