திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (07.10.2021 ) ” அனைத்திற்கும் முன் பிள்ளைகள் ” எனும் கருப்பொருளின் கீழ் மாவட்ட செயலகத்தினரால் சிறுவர்தினக்கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

இன்று காலை 10 மணியளவில் மாவட்ட செயலாளர் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் பாக்கிஸ்தான் அரசின் இலங்கைக்கான பதில் தூதுவர் தன்விர் அஹமட் அவர்களும் மகளீர் மற்றும் சிறுவர் விவகார அபிவிருத்தி மற்றும் முன்பள்ளி , ஆரம்பக்கல்வி , கல்விச்சேவைகள் அமைச்சர் பியால் நிஷாந்தடீ சில்வா மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துக்கோரள , மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் k.m.s.d . ஜெயசேகர , முன்னளா கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது தெரிவு செய்யப்பட்ட முப்பது பாடசாலை அதிபர்களுக்கான மடிக்கணினிகளும் ஏனைய தெரிவுசெய்யப்பட்ட முன்பள்ளிகளுக்கான உபகரணங்களும் வழங்கிவைக்கப்படமை குறிப்பிடத்தக்கது .

திருகோணமலை நிருபர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *