கிழக்குமாகாண ஆளுநருக்கும் விவசாய சம்மேளனங்களுக்குமிடையே சந்திப்பு ….அதிருப்தியில் விவசாயிகள்

தோப்பூர் கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட விவசாய சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை தோப்பூர் கமநல சேவைகள் நிலையத்தில் நடைபெற்றது. முன்னதாக இயற்கைப் பசளை உற்பத்தியின் போது தாவரக் கழிவுகளை அரைக்கும் இயந்திரம் ஒன்றை விவசாயிகளின் பாவனைக்காக கமநல சேவை நிலைய அதிகாரிகளிடம் வழங்கி வைத்த ஆளுநர் அவர்கள் இயற்கைப் பசளை உற்பத்தியின் அவசியம் தொடர்பிலும் இம்முறை இயற்கை முறையிலான விவசாயத்தின் போது எதிர் கொள்ள வேண்டிய சவால்கள் தொடர்பிலும் விவசாய சம்மேளனப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார். அதன் பின்னர் விவசாயிகள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆளுநர் அறிந்து கொள்ள முற்பட்ட போது கமநல சேவை நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த நெற்களஞ்சிய சாலை யுத்த காலத்தில் சேதமடைந்த நிலையில் இன்னமும் புனரமைக்கப்படாமை மற்றும் காணிப்பிரச்சனைகள் தொடர்பாக தோப்பூர் விவசாயிகள் முறையிட்டனர்.தொடர்ந்து செய்கைப்பண்ணப்பட்டுள்ள விவசாயச் செய்கைக்கு பசளையில்லை எனவும் தம்மால் முன்னெடுக்கப்பட்ட இயற்கைப் பசளை உற்பத்தி நிறைவடையவில்லை எனவும் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த ஆளுநர் ஒவ்வொரு சம்மேளனங்களும் கமநல சேவை நிலையங்களும் இப் போகத்துக்குத் தேவையான சேதனப் பசளையினை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் அவை போதாமல் போனால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பசளை விநியோகிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.வீரமாநகர் நாகம்மாள் விவசாய சம்மேளனம் சார்பாக கலந்து கொண்டிருந்த சம்மேளனப் பிரதி நிதியினால் தமது சம்மேளனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் உற்பத்தி செய்யப்படுகின்ற பசளையினை சந்தைப்படுத்த முடியவில்லை எனவும் அரசினால் உற்பத்தியில் ஈடுபடுமாறு மட்டுமே கூறப்படுவதாகவும் அதற்கான எவ்வித உதவிகளையும் வழங்க முன்வருவதில்லை எனவும் கேட்கப்பட்ட போது ஆளுநர் அந்தப் பசளையினை 15ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என்றார் அதனை மறுதலித்த குறித்த பிரதிநிதி 15 ரூபாவுக்கு ஒரு கிலோ மாட்டெருவைக் கூட வாங்க முடியாதளவுக்கு மூலப் பொருட்களின் விலை அதிகரித்து விட்டது அவ்வாறிருக்கும் போது தமது உற்பத்தியினை 15ரூபாவுக்கு விற்பதில் சிரமம் உள்ளதாக தெரிவிக்க ஆளுநருடன் வருகை தந்த விவசாயத் திணைக்கள அதிகாரியொருவர் தம்மால் பத்து ரூபாவுக்கு வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பசளையினை விவசாயிகளுக்கு வழங்க முடியும் என்றார்.அதுவே அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

01.பத்து ரூபாவுக்கு பசளை வழங்க இயலுமை உள்ள அதிகாரிகள் ஏன் இயற்கைப்பசளையினை உற்பத்தி செய்யுமாறு குடைச்சல் கொடுக்க வேண்டும் ????
02.பத்து ரூபாவுக்கு கொண்டு வரப்படுவது உண்மையில் பசளையா அல்லது சீனாவினதும் இந்தியாவினதும் வண்டல் மண்ணா ….? அவ்வளவு குறைந்த விலையில் குறித்த நாடுகள் தமது நாட்டு மண்ணைக் கூட தர முன்வருமா என்பது சந்தேகமே ……?
03.அரசாங்கத்தின் அதிரடி நிலைப்பாடு அடுத்த வருடத்தில் அதிக பிச்சைக்காரர்களை உருவாக்கி விடுவதாக இருப்பது போலவும் அதற்கு மேலதிகமாக இயற்கைப் பசளை உற்பத்தியாளர்களது முயற்சியினையும் கைவிடச் செய்யும் திட்டத்துடன் செயற்படுவது போலவும் தோன்றுகிறது .
04.அரிசி இறக்குமதி அரசுக்கும் இறக்குமதித் தரகர்களுக்கும் கொள்ளை இலாபமீட்டும் தொழிலாகவும் விவசாயிகளைச் சோற்றுக்குப் பிச்சையெடுக்க வைக்கும் எதிர்காலத்திட்டத்துனுமா நகர்கிறது அரசு …?

க. காண்டீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed