திருகோணமலை நகரின் கடைகளில் திடீர் சோதனை 20 லட்சத்திற்கும் அதிகமான அழகு சாதனப்பொருட்கள் பறிமுதல் 

திருகோணமலை தலைமையகப்பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட என்.சி.வீதி,மத்திய வீதி,3ம் குறுக்குத்தெரு வீதியில் நுகர்வோர்பாதுகாப்பு அதிகாரிகளும் பொலிஸாரும் இனுந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அழகுசாதனப்பொருட்கள்,கிறீம் வகைகள்,சாயப்பொருட்கள்,போலியாக தயாரிக்கப்பட்ட சவக்கார வகைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு தடைசெய்யப்பட்ட பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் சந்தைப்பெருமதி சுமார் 20லட்சத்திற்கும் அதிகம் என தெரிவித்த அதிகாரிகள் பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்குப்பட்டு தடைசிய்யப்பட்ட பொருட்களை விற்பனைசெய்த கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை சட்ட நடவடிக்கு மேற்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் சமூகவலைதளங்களில் குறிப்பிட்ட தடைவிதிக்கப்பட்ட பொருட்களை விற்க முற்பட்ட ஒருவர் இன்று காலை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சட்டவிரோத பொருட்களை விற்க முற்பட்ட நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நகரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் மேற்படி பொருட்கள் பரிமுதல் செய்யப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்

ஏ.எம்.கீத்

திருகோணமலை 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed