திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் நேற்று இரவு 8மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றதாக சம்பவ இடத்திலிருந்து எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றன்றார் . டீசல் முச்சக்கரவண்டி , கார் மற்றும் முச்சக்கரவண்டி என்பவையே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன . டீசல் முச்சக்கரவண்டி சாரதி மது போதையுடன் வாகனத்தை செலுத்தியதாகவும் முன்செல்ல எத்தனித்த வேளையிலையே குறித்த முச்சக்கரவண்டி கட்டுப்பட்டை இழந்து கார் மற்றும் மற்றைய முச்சக்கரவண்டியுடன் மோதியது. இதில் டீசல் ஆட்டோ சாரதி பலத்த காயங்களிற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கார் மற்றும் மற்றைய முச்சக்கரவண்டியிலும் சிறு சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed