திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் சீனக்குடா வளைக்கு அன்மையில் வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் முறிந்து வாகத்தின் மேல் வீழ்ந்து பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது .

குறித்த விபத்தில் படுகாயமடைந்த வாகனத்தின் சாரதி திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .

வீதியின் ஓரத்தில் மின்கம்பம் வீழ்ந்த நிலையில் குடைசாய்ந்த டிப்பர் ரக வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் JCB இயந்திரத்தின் உதவியுடன்
போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் . சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed