மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த குறித்த உணவகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நோயாளி ஒருவர் வாங்கிய உணவுப்பொதியில் பல்லியொன்று இறந்த நிலையில் கணப்பட்டதாக புளியந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறி அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் குறித்த சிற்றூண்டிச்சாலைக்கு எதிராக உணவுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த சிற்றுண்டிச்சாலையினை தறிகாலிமாக மூடுவதற்கான உத்தரவினை மட்டக்களப்பு நீதாவான் நீதிமன்றினால் வழங்கப்பட்டது .

அதனடிப்படையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் குறித்த சிற்றுண்டிச்சாலைக்கு இன்று தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *