காலி பிரதான பேருந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள சதொச வர்த்தக நிலையத்திற்குள், அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து அங்கிருந்து பொருட்களைக் கொள்ளையிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாகக் காலி காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ள போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதொச வர்த்தக நிலையத்துக்கு முன்பாக இருந்த தீயணைக்கும் சிலிண்டரில் ஏறி, அதன் பிரதான கண்ணாடியை உடைத்து, சந்தேகநபர்கள் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *