திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சங்கேணியில் பால நிர்மாண பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில், மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப்பாலம் மூழ்கிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் அடங்குவதாகக் கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களில் நான்கு பேருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

விபத்தில் பலர் மரணித்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்படும் நிலையில் தொடர்ந்தும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *