கிண்ணியாவில் இன்று காலை இடம்பெற்ற மிதவை படகு விபத்தை தொடர்ந்து குழப்ப கரமான சூழல் நிலவி வருவதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார் .

குறித்த விபத்து இடம்பெற காரணமான முறையான பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளாத அரசியல்வாதிகள் மற்றும் அரச ஊழியர்களை கண்டித்து வீதியில் டயர்கள்எரித்து பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் .

தொடர்ந்தும் குழப்பகரமான சூழல் நிலவுவதால் பிரதேசமெங்கும் கடைகள் மூடப்பட்டு இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது .

ஆர்ப்பாட்டக்காரர்ளினால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *