கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட – குறிஞ்சாக்கேணியில் நேற்று முன்தினம் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் 4 மாணவர்கள் உட்பட ஆறு பேர் பலியாகினர்.

இந்நிலையில், இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கிண்ணியாவில் இன்றைய தினம் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

வர்த்தக நிலையங்களை மூடி, வீடுகளிலும் பொது இடங்களிலும் வெள்ளைக் கொடிகளை ஏற்றித் துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு கிண்ணியா பொது அமைப்புகளின் ஒன்றியம் விடுத்த கோரிக்கைக்கு அமைய கிண்ணியா நகரம் முற்று முழுதாக முடங்கியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *