அல்வை நேசன்

யாழில் பிரபல ஆலயம் ஒன்றில் இன்று காட்சி கொடுத்த நாகம்; பரபரப்பை ஏற்ப்படுத்திய சம்பவம்

யாழின் பிரபல ஆலயம் ஒன்றில் இன்று காட்சி கொடுத்த நாக பாம்பை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.யாழ் அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.இன்று ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வெளிமண்டபத்தில் அம்பாள் நாகரூபத்தில் அடியவர்களுக்கு காட்சி கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அராலி கிராமத்தின் கிழக்குப் பக்க முகப்பில் காவல் தெய்வம் போன்று முதலில் அமைந்திருக்கும் திருக்கோயில் தான் அராலி ஆவரம்பிட்டி முத்துமாரியம்மன் ஆலயமாகும்.

இவ்வாலயம் ஈழத்து வரலாற்றுப் புகழ்பெற்ற தலம், பழம் பெரும் சக்தி ஆலயங்களுள் இந்த ஆலயம் முதன்மை பெற்ற ஒன்றாகும். இங்கு அம்மாள் அருவத்திருமேனி கொண்டு அருள் ஒளி பரப்பி நிற்கும் தன்மை அதி உத்தமமானதும், அற்புதமானதும் ஆகும்.

ஆலயம் பழமை வாய்ந்த மிகச் சில கருங்கல் ஆலயங்களில் முதன்மை பெற்று இருக்கின்றது. இவ்வாலயத்தின் தூபி வேலை வேறு எந்த ஆலயங்களிலும் இல்லாத முறையில் விசேடமாக அமைக்கப் பெற்று இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *