(ராமு தனராஜா)

ஹிங்குருகடுவ பொலிஸாரினால் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு பொலிஸ் சிறைக்கூண்டில் அடைத்து இருந்த வேளை சிறைக்கூண்டிலுள்ள கம்பியை கழற்றி தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மீது பண்டாரவளை , பதுளை, வெளிமடை ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வேளையிலேயே ஹிங்குருகடுவ பொலிஸாரினால் 31 வயதுடைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறைக்கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வேளையிலேயே தப்பி சென்றுள்ளார்.

இவரை தேடும் பணிகள் தீவிரமடைந்த நிலையில் குறித்த சந்தேக நபர் வராதொலை பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த வேளையிலேயே இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இன்றைய தினம் பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *