திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நேற்று முற்பகல் வேளையில் கடலில் நீராடச் சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் இறக்கக்கண்டி வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 13 மற்றும் 14 வயதுகளை உடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

சம்பவம் தொடர்பான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *